8.6.10

ஆறு கவிதைகள்



1.

வானத்தில்

நீண்ட

தொலை தூரத்தில்

எல்லாம்

கணக்கில்லாமல்

பறக்கும் புள்ளினங்கள்


2.

விதிர்விதிர்த்துப் போனேன்

எங்கும்

ஓய்ச்சலில்லாமல்

சத்தம் போட்டபடி

பறக்கும்

வாகனங்கள்


3.

அந்தக் கோயிலில்

வீற்றிருக்கும்

வியாக்கிழமை

ஓடணிந்து அமர்ந்திருக்கும்

பிச்சைக்காரர்கள்

காவித்துணியில் ஜொலிக்கிறார்கள்

சிவனடியார்களாய்


4.

பெட்டிபோல்

வீட்டில் குடியிருக்கிறேன்

பெட்டியிலிருந்து

வெளியில் வந்து

பெட்டிக்குள் நுழைந்து

விடுகிறேன்.


5.

அந்தப் பெண்ணின்

மார்பகங்கள்

படபடத்துக் கொண்டிருந்தன

தடவிக்கொடுக்க

கையை நீட்டினேன்

கை நீண்டுகொண்டே

போயிற்று...


6.

வெகுநேரம்

வெகுநேரம்

கண்ணை மூடிக்கொண்டிருக்கிறேன்

கண்ணைத் திறந்தும் பார்த்தேன்

உலகம் ஒன்றும் மாறவில்லை

1 comment:

  1. நான்காவதும் ஆறாவதும் பிடிச்சிருக்குங்க.

    ReplyDelete