7.3.11

ஜோல்னாப் பைகள்

விதம்விதமாய் ஜோல்னாப் பைகளை
சுமந்து வருவேன்
பார்க் ரயில்வே ஸ்டேஷன் வாசலில்
கூவி விற்பார்கள் ரூபாய்க்கு பத்தென்று
வகைவகையாய்ப் பைகளை வாங்குவேன்
வீட்டில் உள்ளவர்களுக்கு
ஏனோ பிடிப்பதில்லை
நான் வாங்கும் ஜோல்னாப் பைகளை

பைகளில் ஸ்திரமற்ற தன்மையை
கொஞ்சம் அதிக கனமுள்ள
புத்தகங்களை சுமக்காது
ஓரம் கிழிந்து தொங்கும்
இன்னொரு முறை தையல் போடலாமென்றால்
மூன்று பைகளை வாங்கும்
விலையை வாய்க்கூசாமல் கேட்பார்கள்

ஜோல்னாப் பைகள்
மெது மெதுவாய் நிறம் மாறி
வேறு வேறு விதமான
பைகளாய் மாறின
ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை
உறவினர் வீட்டிலிருந்து
அளவுக்கதிமாய் தேங்காய்களை
உருட்டிவர
சாக்குப் பைகள் தயாராயின

மைதிலிக்கு மனசே வராது
என்னிடம் பைகளைத் தர
வீட்டில் புத்தகக் குவியலைப்
பார்க்கும் கடுப்பை
பைகளில் காட்டுவாள்
ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை

பைகளில் இன்னது என்றில்லாமல்
எல்லாம் நுழைந்தன சுதந்திரமாய்

வீரன் கோயில் பிரசாதம்
மதியம் சாப்பிடப் போகும் பிடிசாதம்
வழுக்கையை மறைக்க
பலவித நிறங்களில் சீப்புகள்
உலக விசாரங்களை அளக்க
ஆங்கில தமிழ் பத்திரிகைகள்
சில க.நா.சு கவிதைகள் புத்தகங்கள்
எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கும்
போன ஆண்டு டைரி

பின்
பின்
உடைந்த சில
கண்ணாடி வளையல் துண்டுகள்
பேப்பர் வெயிட்டுகள்
எல்லாம் எப்படி வந்தன
பைக்குள்...

3 comments:

 1. அருமை சுதந்திரமாக எல்லாம் நுழைய முடிந்த
  ஜோல்னா பைகளில் உடைந்த கண்ணாடி வளையல்கள்
  நுழைந்ததை புரிந்து கொள்ள முடிகிறது
  அது என்ன பேப்பர் வெயிட் ?
  நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்க்கையையே சுமக்கிற இந்த ஜோல்னா பைகள் வெறும் காற்றுப் பைகளல்ல... புத்தகங்களையும் சுமக்கிறது... உணர்வுகளின் ஊடகமாய் ஆடி ஆடி அலைகிறது... அருமையான கவிதை

  ReplyDelete
 3. I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
  Nice One...
  For Tamil News Visit..
  https://www.maalaimalar.com/ | https://www.dailythanthi.com/

  ReplyDelete